இராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் வாழ்வாதாரம் இன்றி தவித்த மீனவர்கள், கட்டடத் தொழிலாளர்களுக்கு முத்தூட் குழுமம் சார்பில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அய்யன் தோப்பு பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த வெளி மாவட்ட கட்டட தொழிலாளர்கள் 40க்கும் மேற்பட்டோர், 144 தடை உத்தரவால் வேலையின்றி தவித்து வந்தனர். இந்நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் கட்டட பணி நடைபெறும் இடத்திலேயே தங்கினர். இவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் முத்தூட் குழுமம் சார்பில் வழங்கப்பட்டது. தங்கச்சிமடம், பாம்பன் பகுதியில் கடல் தொழிலுக்குச் செல்லாமல் வீடுகளுக்குள் முடங்கிய மீனவர்களுக்கும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் முத்தூட் குழுமம் சார்பில் நிவாரணம்
எழுதியவர்: mohan April 11, 2020, 12:43 pm




You must be logged in to post a comment.