17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றத்தில் சமூக இடைவெளி இல்லாமல் சாலையோரத்தில் கூட்டமாக தங்கும் ஆதரவற்றவர்கள் மண்டபத்தில் தங்க வைக்க கோரிக்கை…

திருப்பரங்குன்றத்தில் சமூக இடைவெளி இல்லாமல் சாலையோரத்தில் கூட்டமாக தங்கும் ஆதரவற்றவர்கள் மண்டபத்தில் தங்க வைக்க கோரிக்கை…

எழுதியவர்: ஆசிரியர் April 10, 2020, 10:10 pm

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் வாசலில் ஆங்காங்கே சாலையோரம் உள்ள ஆதரவற்றவர்களை மீட்டு மண்டபத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பரங்குன்றம் சன்னதி தெரு, சரவணப் பொய்கை, கல்வெட்டு குகை கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆதரவற்றவர்கள், துறவிகள், யாசகர்கள் என நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் குறிப்பாக 50 வயதிற்க்கும் மேற்பட்டவர்கள் இன்னும் சாலைகள் மற்றும் தெருக்களில் தங்கி வருகின்றனர். மேலும் இவர்கள் கொரானா குறித்த எந்தவித அச்சமும் இன்றி சகஜமாக சமூக இடைவெளி இல்லாமல் வசிக்கின்றனர்.

இது குறித்து ஆதரவற்றவர்கள் கூறுகையில் எங்களுக்கு மூன்று வேளைகளுக்கும் உணவு தருகின்றனர். ஆனால் நாங்கள் சாலைகளில் தான் வசிக்கின்றோம் அதிகாரிகள் எங்கள் பெயர்களை குறித்து சென்றனர். ஆனால் தற்போது வரை நாங்கள் சாலைகளில் மட்டுமே தங்கியுள்ளோம் என கூறினர். கொரானா தீவிரமாக பரவி வரும் வேலையில் திருப்பரங்குன்றத்தில் 100 க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளி மற்றும் முககவசம் இல்லாமல் இருப்பது மிகப்பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது எனவே உடனடியாக சாலைகளில் உள்ள ஆதரவற்றவர்களை மீட்டு பாத்திரமாக தங்க வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!