தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில்
கோவிட் பரிசோதனை கூடம் – கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் தகவல்..
சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகிறது.
அந்த வகையில் தென்காசி மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில் கோவிட் பரிசோதனை கூடம் அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் தெரிவித்துள்ளார்.
கோவிட் பரிசோதனை கூடம் குறித்து அவர் கூறியதாவது:
தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் கோவிட் பரிசோதனைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு பேருக்கு டாக்டர்கள் சிகிச்சை தனித்தனியாக அளிக்கக்கூடிய வகையில் தனித்தனி இரண்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அறைகளிலிருந்து கழிவுகளை வெளியேற்ற வசதி செய்யப்பட்டுள்ளது .
அறைகளுக்குள் சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் வைத்துக் கொள்வதற்கும் வசதி உள்ளது.தானியங்கி கதவு வசதியும் செய்யப்பட்டுள்ளது.
பரிசோதனை முடிந்து நோயாளிகளை வெளியே சென்றதும் தானியங்கி சுத்தம் செய்யும் வசதியும் உள்ளது.
ஒவ்வொரு நோயாளிக்கும் 10 முதல் 15 நிமிடங்களுக்குள் பரிசோதனை செய்து முடிக்கப்படும்.மேலும் இன்றுடன் பரிசோதனை கூடம் அமைக்கும் பணி முழுமை பெற்றுவிடும் என்று அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் கூறினார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.