கொரோனோ வைரஸ் உலகம் முழுவதும் தன் கொடூர முகத்தை காட்டி வந்தாலும், மக்கள் அந்த கொடூரத்தில் இருந்தும், அதனால் ஏற்பட்ட கவலையில் இருந்து மீளவும் பல்வேறு பொழுது போக்கு விசயங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.
கொடூரமான கொரோனா அன்றாட வாழ்கை முறையை மாற்றி அமைத்திருந்தாலும், பல பழமையான விசயங்களில் மக்கள் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்கள். பாரம்பரியமான விளையாட்டான பல்லாங்குழியை பெண்கள் மீண்டும் பரணில் இருந்து இறக்கியுள்ளனர். அதுபோல ஆண்கள் கொரோனோ தாக்கும் வரை பரபரப்பாக இயங்கி வந்தவர்கள் இன்று மனைவி, குழந்தையுடன் வீடுகளின் மாடிகளில் இருந்து பட்டம் விட தொடங்கியுள்ளார்கள்.
இதனால் கீழக்கரை நகர் முழுவதும் கடந்த சில நாட்களாக வண்ணமயமான பட்டங்கள் பறப்பதை காண முடிகிறது.










You must be logged in to post a comment.