18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உப்பூரில் உள்ள வெளி மாநில தொழிலாளர்களுக்கு நிவாரணம்…

உப்பூரில் உள்ள வெளி மாநில தொழிலாளர்களுக்கு நிவாரணம்…

எழுதியவர்: ஆசிரியர் April 10, 2020, 6:57 pm

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் உப்பூர் பகுதியில் பணிபுரியும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ராமநாதபுரம் முதன்மைக் கல்வி அலுவலர் அ.புகழேந்தி மற்றும் ஆர்எஸ் மங்கலம் தாசில்தார் பெ.சாந்தி ஆகியோர் வழங்கினர்.

இப்பொருட்களுக்கு உப்பூர் அமிர்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி தாளாளர் உடற்கல்வி ஆசிரியர் பாண்டியன் நிதி உதவினார். இதற்கான ஏற்பாடுகளை அரசு மேல்நிலைப்பள்ளி மண்டபம் முகாம் உடற்கல்வி ஆசிரியர் எம்.ரமேஷ்,  முதன்மை கல்வி அலுவலக  இளநிலை உதவியாளர்  கணேசன் ஆகியோர் செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!