17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா வைரஸ் தடுப்பு பணி-சுரண்டை காமராஜர் காய்கனி சந்தையில் கிருமி நாசினி தெளிப்பு..

கொரோனா வைரஸ் தடுப்பு பணி-சுரண்டை காமராஜர் காய்கனி சந்தையில் கிருமி நாசினி தெளிப்பு..

எழுதியவர்: mohan April 10, 2020, 4:41 pm

கொரோனா தடுப்பு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் தென் தமிழகத்தின் முக்கிய காய்கறி சந்தையான சுரண்டை காமராஜர் காய்கனி சந்தையில் குறிப்பிட்ட நேரத்தில் திறக்க தென்காசி ஆர்டிஓ பழனிக்குமார், தாசில்தார் ஹரிகரன் சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி ஆகியோர் அனுமதி வழங்கினர். இதனால் காலை நேரத்தில் மொத்த வியாபாரிகள் மற்றும் கேரள வியாபாரிகள் வந்து காய்கறிகள் வாங்கி செல்கின்றனர்.இந்நிலையில் இப்பகுதியில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க சுரண்டை தீயணைப்பு நிலையத்தின் மூலம் சக்திவேல், ஏகேஎஸ் சேர்மசெல்வம், கடற்கரை நாடார், தெய்வேந்திரன், ஜவஹர் தங்கம் உள்ளிட்டோர் ஏற்பாட்டில் நிலைய அலுவலர் செல்வராஜ் நிலைய அலுவலர் போக்குவரத்து பாலசந்தர், வீரர்கள் மாரியப்பன், வெள்ளபாண்டியன், திலகர், உதயபிரகாஷ் ஆகியோர் கிருமி  மருந்து மார்கெட் மற்றும் 18வார்டு பகுதியில் தெளித்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!