17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இளைஞா்களை ஒருங்கிணைத்த உசிலம்பட்டி கோட்டாச்சியருக்கு பாராட்டுகள் குவிகிறது

இளைஞா்களை ஒருங்கிணைத்த உசிலம்பட்டி கோட்டாச்சியருக்கு பாராட்டுகள் குவிகிறது

எழுதியவர்: mohan April 10, 2020, 2:09 pm

கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அத்யாவசிய தேவைகள் தவிர பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தி உள்ளது.இந்நிலையில் சுகாதாரப்பணியாளா்கள் மருத்துவப்பணியாளா்கள் மற்றும் காவல் துறையினருடன் களப்பணியாற்ற ஏராளாமான இளைஞா்கள் தேவைப்பட்டனா். இதை உணா்ந்த உசிலம்பட்டி இளம் வயது கோட்டாச்சியா் ராஜ்குமாா் அரசு வழிகாட்டிதழின்படி உசிலம்பட்டியிலுள்ள தன்னாா்வலா்கள் அரசுடன் இணையசமூக வலைத்தளங்கள் மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தாா்.இதனையடுத்து ஏராளமான இளைஞா்கள் தன்னாா்வா்லாக இணைய விண்ணப்பித்து இருந்தனா்.அதில் கவனமுடன் பாிசீலித்து இளைஞா்களை தன்னாா்வா்லாக உருவாக்கியுள்ளாா்.

குறிப்பாக உசிலம்பட்டி பகுதியில் இளைஞர்கள் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் கூடும் காய்கறி சந்தை.ஏடிஎம் பேருந்து நிலையப் பகுதிகளில் தங்களது சமூக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.. அதில் குறிப்பாக உசிலம்பட்டி பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.. தங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடும் என்று பாராமல் இலவசமாக பொது சேவையில் ஈடுபடும் உசிலம்பட்டி இளைஞர்களுக்கு உசிலம்பட்டி பொதுமக்கள் நன்றி தொிவித்தனா்.ஆனால் வெட்டிக்கூட்டமாக அடையாளம் காணப்பட்ட தங்கள் மேல் நம்பிக்கை கொண்டு தன்னாா்வா்லாக உருவாக்கிய உசிலம்பட்டி கோட்டாச்சியருக்கு இளைஞா்கள் நன்றி தொிவித்தனா்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!