17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் விதியை மீறும் வாகனங்களுக்கு காவல்துறை எச்சரிக்கை வண்ணம்……

கீழக்கரையில் விதியை மீறும் வாகனங்களுக்கு காவல்துறை எச்சரிக்கை வண்ணம்……

எழுதியவர்: ஆசிரியர் April 10, 2020, 12:42 pm

இன்று 10.4.2020 இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஆய்வாளர் தங்க கிருஷ்ணன் மற்றும் சார்பு ஆய்வாளர் இராமச்சந்திரன் தலைமையிலான போலீசார்கள் 144 தடையை மீறி வெளியே வரும் இருசக்கர வாகனத்திற்கு வெள்ளை நிற பெயிண்ட் முன்பகுதியில் பூசப்பட்டு எச்சரித்து வருகின்றனர்.

மீண்டும் அந்த வாகனம் 5 நாட்களுக்குள் வெளியில் வந்தால் காவல்துறையினர் பறிமுதல் செய்வார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒவ்வொரு நாளும் இருசக்கர வாகனத்தின் முன் பகுதி மீது வெவ்வேறு வண்ணங்களில் பெயிண்ட் பூசப்படும்,  அந்த வாகனம் 5 நாட்களுக்குள் வெளியே வந்தால் காவல்துறை பறிமுதல் செய்வார்கள் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளார்கள்.

கீழை நியூஸ் SKV. சுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!