கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அத்யாவசிய தேவைகள் தவிர பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தி உள்ளது.இந்நிலையில் ஊரடங்கு நாளில் மது கிடைக்காத விரக்தியில் மதுப்பிரியர்கள் அரசு மதுபானக் கடையை உடைத்து மதுபாட்டில்களை திருடி வருகின்றனர்.இதனால் அரசு
மதுபானக்கடையிலுள்ள மதுபானங்களை தனியார் மண்டபத்திற்கு மாற்றி சீல் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.இதனையடுத்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியிலுள்ள டாஸ்மார்க் கடையில் உள்ள மதுபாட்டில்களை தனியார் மண்டபத்திற்கு மாற்றும் பணி நடைபெற்றது.ஒவ்வொரு கடையிலுள்ள மதுபாட்டில் பெட்டிகளும் டாஸ்மார்க் மேற்பார்வையாளர் முன்னிலையில் போலிஸ் பாதுகாப்புடன் லாரிகளில் ஏற்றி தனியார் மண்பத்திற்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்றது.இதனையொட்டி ஒவ்வொரு டாஸ்மார்க்கிலும் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஊரடங்கு நாளின் போது அரசு மதுபானக்கடையில் மதுபாட்டில்கள் திருடு போவதால் மதுபாட்டில்களை போலிஸ் பாதுகாப்புடன் மண்டபத்திற்கு மாற்றும் பணி நடைபெற்றது.
எழுதியவர்: mohan April 10, 2020, 1:25 pm




You must be logged in to post a comment.