மதுரை நகரின் முக்கிய பகுதியான டவுன் ஹால் ரோட்டில் ஜே பி என்னும் கைக்கடிகாரம் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது இதில் நேற்று (09/04/2020)மாலை திடீரென கரும்புகை வருவதைப் பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இச்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரை டவுன் தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் நான்கு லட்ச ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.
மேலும் 144 தடை உத்தரவு காரணமாக கடைகள் திறக்கப்படாததால் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து மதுரை திலகர் திடல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்











You must be logged in to post a comment.