கொரோனாவை தடுக்கும் வகையில் சுரண்டையில் கூட்டுறவு பண்டகசாலை மூலம் நடமாடும் காய்கறி விற்பனை துவக்கம்…
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சமூக விலகலை கடைபிடிக்கவும் பொதுமக்கள் கடைகளுக்கு வராமல் தவிர்க்க வீடுகளுக்கே சென்று காய்கறிகள் கிடைக்கும் வகையில் நடமாடும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோன்று சுரண்டை சிவகுருநாதபுரம் கூட்டுறவு பண்டகசாலை லிமிடெட் மூலம் நியாயமான விலையில் நடமாடும் காய்கறி விற்பனை துவங்கியது.
அதனை கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எஸ்கேடி ஜெயபால் தலைமை வகித்து துவக்கி வைத்தார். மேலாளர் சரவணன், இயக்குனர்கள் சமுத்திரம் (எ) ஆறுமுகம், தேனம்மாள் தங்கராஜ், அண்ணாமலை, சங்கர், சங்கரேஸ்வரன், மாரியப்பன், முத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்வாகனம் மூலம் அனைத்து காய்கறிகளும் நியாயமான விலையில் வீடுகள் தோறும் விற்பனை செய்யப்படும் எனவும், பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்கவும், கொரோனாவை தடுக்கும் பணியில் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என தலைவர் எஸ்கேடி ஜெயபால் கேட்டுக்கொண்டார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.