18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெரியபட்டினம் ஊராட்சியில் எஸ்டிபிஐ., சார்பில் கிருமி நாசினி தெளிப்பு..

பெரியபட்டினம் ஊராட்சியில் எஸ்டிபிஐ., சார்பில் கிருமி நாசினி தெளிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் April 9, 2020, 9:53 pm

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக, இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு பணி நடந்தது பெரியபட்டினம் ஊராட்சி தலைவி அக்பர் ஜான் பீவி கூறுகையில் கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டு உலகமே பெரும் துயரத்தை சந்தித்துள்ளது.

இந்திய அரசு தேசம் முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து கட்டுக்குள் கொண்டுவர பெரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது, இத்தொற்று நோயை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு வேலைகள் நடைபெற்று வருகிறது, அதன் ஒரு பகுதியாக பெரியபட்டினம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் இணைந்து பெரியபட்டினம் நகர் முழுவதும் கொரோனா கிருமி பரவாமல் தடுக்கும் விதமாக கிருமி நாசினி தெளிப்பு பணியில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இப்பணி நடைபெறும் என்றார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!