18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்து நிவாரண உதவி..

மதுரையில் தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்து நிவாரண உதவி..

எழுதியவர்: ஆசிரியர் April 9, 2020, 9:39 pm

கொரானா தொற்று பெரும் தொற்றாக மாறி உலக நாடுகளை அச்சுறுத்தி வருவது. சமூக தொற்றாக மாறி வட மல் இருக்க ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலே முதன் முறையாக மதுரையில் கொரானாவுக்கு ஒரு உயிர் பலியானது. மேலும் 25 பேர் கொரானா பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அதனால் மதுரை மாவட்டத்தில் 7 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு தூய்மை படுத்துதல், கிருமி நாசினி தெளித்தல், உள்ளிட்ட பணிகளை காலை மாலை என இருவேளையும் செய்துவருகின்றனர்.

மேலும் நகரின் முக்கிய இடங்கள் அனைத்திலும் கிருமிநாசினி தெளித்தல் தூய்மைப்படுத்துதல் பணிகளை மேற்கொண்டு வருவதால் அப்பணியாளர்களை கவுரவிக்கும் பொருட்டு மதுரை ஆத்திகுளம் பகுதியில் அதிமுக இலக்கிய அணி மாவட்ட செயலாளர் சுரேஷ், மாநில வழக்கறிஞர் அணி மாநில இணை செயலாளர் புதூர் சந்திரன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து கெளரவித்தனர். அதோடு அரிசி, காய்கறி தொகுப்பும் வழங்கினர்.

மேலும்  யமுனா வீதி, பொன்னி வீதி, தேசிய விநாயகர் வீதி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழை மக்கள் சுமார் 1000 குடும்பங்களுக்கு அரிசி காய்கறி நிவாரண பொருட்கள் வழங்கினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!