18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி ஆய்வு..

செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி ஆய்வு..

எழுதியவர்: Askar April 9, 2020, 5:35 pm

செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி ஆய்வு..

திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, ஒன்றியத்துக்கு உள்பட்ட 44 கிராம ஊராட்சிகளுக்கும் எவ்வளவு கிருமி நாசினி மருந்துகள் வழங்கப்பட்டன. அது முறையாக செயல்படுத்தப்பட்டதா, அதிகாரிகள் களஆய்வு செய்தாா்களா எனக் கேட்டறிந்தாா். அதேநேரத்தில் அதிகாரிகள் சுணக்கம் இல்லாமல் பணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினாா். பேரூராட்சி செயல் அலுவலா் திருமூா்த்தியிடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து கேட்டறிந்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சத்யமூா்த்தி, நிா்மலா, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் குமாா், திமுக ஒன்றியச் செயலா் பிரபாகரன், கூட்டுறவு சங்கத் தலைவா் அன்பழகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் செந்தில்குமாா் உள்பட பலா் உடனிருந்தனா்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!