17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனோவால் தமிழக அரசும்,மாவட்ட நிர்வாகங்களும் கர்ப்பிணிகள் மற்றும் தொடர் மருத்துவம் பார்க்கும் நோயாளிகளின் மீது உள்ள கவனத்தை குறைத்து விட கூடாது..

கொரோனோவால் தமிழக அரசும்,மாவட்ட நிர்வாகங்களும் கர்ப்பிணிகள் மற்றும் தொடர் மருத்துவம் பார்க்கும் நோயாளிகளின் மீது உள்ள கவனத்தை குறைத்து விட கூடாது..

எழுதியவர்: ஆசிரியர் April 9, 2020, 2:03 pm

கொரோனோவால் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும் கர்ப்பிணிகள் மற்றும் தொடர் மருத்துவம் பார்க்கும் நோயாளிகளின் மீது உள்ள கவனத்தை குறைத்து விட கூடாது என சமூக ஆர்வலர்கள் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா கிருமி தாக்கம் அதிகரித்து உள்ளது.பல் வேறு நாடுகளைப்போல் இந்தியாவிலும்,தமிழகத்திலும் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இந்த அசாதாரண சூழ்நிலையில் மக்கள் பல நாட்களாக வீடுகளில் முடங்கி இருக்கின்றார்கள்.

தற்போது நிலவும் இந்த சூழ்நிலையில் கர்ப்பிணி பெண்கள்,தொடந்து மாத மருத்துவம் செய்யும் நோயாளிகள் பாதிப்படைந்து வருகின்றார்கள்.குறிப்பாக தடுப்பு ஊசி போடும் கர்ப்பிணி பெண்கள்,ஸ்கேன் எடுக்கும் நிலையில் இருக்கும் கர்ப்பிணி பெண்கள்,சர்க்கரை நோய் மற்றும் தொடர் மருத்துவம் பார்க்கும் நோயாளிகள் நலன் கருதி அரசும்,மாவட்ட நிர்வாகங்களும் இப்படிப்பட்ட நோயாளிகள் மருத்துவம் பார்க்க சென்று வர வாகன ஏற்பாடுகள் மற்றும் சலுகைகள் வழங்கி தொடர் சிகிச்சை பெற வழி வகை செய்ய வேண்டும்.இது போல் பல இடங்களில் பணம் இருந்தும் மக்கள் உணவு பொருள்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றார்கள்.எனவே அரசு சார்பாக உதவி எண்களையும்,சமூக ஆர்வலர்கள் உதவி எண்களையும் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரம் செய்து பொதுமக்களுக்கு தடையில்லாமல் உணவுகள் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!