17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தரங்கம்பாடியில் அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவ ஆய்வுக் கூட்டம்

தரங்கம்பாடியில் அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவ ஆய்வுக் கூட்டம்

எழுதியவர்: mohan April 9, 2020, 12:44 pm

நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகார் அடுத்து தரங்கம்பாடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை முன்னெச்சரிக்கையாக அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கும் மருத்துவ ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக் சந்திரகுமார் தலைமையில் மருத்துவர் புவனேஸ்வரி, பேரூராட்சி செயலாளர் ரஞ்சித், சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் சுப்பிரமணியம், ஜெயக்குமார், வெங்கடேசன், சிங்காரவேலு கலந்துகொண்டனர். சுகாதார பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக் சந்திரகுமார் கூறியது. பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்த ஆயப்பாடி, திருக்களாச்சேரி, பாலூர், எடுத்துக்கட்டி பகுதிகளுக்குள் செல்லும்பொழுது தங்களுக்குள்ளாகவே சமூக இடைவெளி விட்டு சுகாதாரமான முறையிலும், பாதுகாப்பு கவசம், கையுறை, சானிடரி போன்ற பாதுகாப்பு சாதனங்கள் பயன்படுத்த வேண்டும்.ஒரு வீட்டிற்கு 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இருந்தால் அவர்களின் வீட்டின் வாசலில் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். குழந்தை பிறந்து 45 நாட்களே ஆன வீட்டில் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். ஒவ்வொரு வீடாக சென்று விசாரணை செய்யும் பொழுது தொலைபேசி எண் சரிபார்த்து வாங்க வேண்டும். வயதான பெண்களிடம் அல்லது முன்னுக்குப் முரணாகப் பேசும் நபர்களுடன், அன்பாகவும் அமைதியாகவும் சுகாதாரம், துப்புறவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். வளையல்கள், கைக்கடிகாரம், கொலுசு போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது. தினமும் நன்கு சோப்பு போட்டு தலை குளிக்க வேண்டும். தினமும் ஒவ்வொரு வீடாக, ஒவ்வொரு தனி நபர்களையும் கண்காணிக்கப்பட வேண்டும் இது தொடர்ந்து 28 நாட்கள் நடைபெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இரா. யோகுதாஸ்மயிலாடுதுறை.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!