மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையைச் சேர்ந்த 3பேர் டில்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொண்டு வீடுதிரும்பிய நிலையில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு மதுரை அரசு ராஜாஜி
மருத்துவமணையில் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேரும் தாங்களாகவே முன் வந்து மதுரை அரசு இராஜஜி மருத்துவமனையை சேர்ந்து மருத்துவர்களால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதில் 3 பெண்கள் உள்பட 4 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் அவர்களுடன் தொடர்பிலிருந்த மேலும் 8 பேர் மதுரை அனுப்பி வைக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில் அவர்கள் வசித்துவந்த குடியிருப்புப் பகுதிகள் முழுவதும் தடைஏற்படுத்தி; சீல்வைக்கப்பட்டு அந்த பகுதி முழுவதும் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் வசிக்கும் மற்றவர்களும் தாங்களாகவே தனிமைப்படுத்தி கொண்டு வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் இஸ்லாமியர்கள் வசிக்கும் தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
உசிலம்பட்டி அருகே எழுமலையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் இஸ்லாமிய குடியிருப்புப் பகுதியில் தடைஏற்படுத்தி சீல்வைக்கப்பட்டு சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
எழுதியவர்: mohan April 9, 2020, 12:18 pm




You must be logged in to post a comment.