18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே பா.ஜ.க.வின் மோடி கிச்சன் சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

உசிலம்பட்டி அருகே பா.ஜ.க.வின் மோடி கிச்சன் சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

எழுதியவர்: mohan April 9, 2020, 12:10 pm

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு உள்ள நிலையில், வீட்டிலேயே முடங்கியிருக்கும் பொதுமக்களுக்கு மோடி கிச்சன் சார்பில் உணவு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்ப நாயக்கனூர் பஞ்சாயத்திற்குட்பட்ட இ, புதுப் பட்டி கிராமத்தில் பாஜக மோடி கிச்சன் சார்பில், பொதுமக்கள் 500 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த அன்னதான நிகழ்ச்சி, பாரதிய ஜனதா கட்சி மதுரை புறநகர் தெற்கு மாவட்ட தலைவர் சுசேந்தின் அறிவுரையின் படி, மாவட்ட செயலாளர் சொக்கநாதன் வலி காட்டுதலின்படி மதுரை மாவட்ட ஓபிசி தலைவர் ரஞ்சித் குமார் முன்னிலையில், மண்டல தலைவர் முருகன் ஆகியோர்கள் இந்த அன்னதான நிகழ்ச்சியை பொது மக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தனர். இதில் பாஜக நிர்வாகிகள் தங்கராஜ், சின்னசாமி’ வேல் குமார் உள்ளிட்ட தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!