18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கலசபாக்கம் அருகே முதியோா்கள் காலில் விழுந்து கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்திய ஊராட்சி மன்றத் தலைவர்..

கலசபாக்கம் அருகே முதியோா்கள் காலில் விழுந்து கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்திய ஊராட்சி மன்றத் தலைவர்..

எழுதியவர்: Askar April 9, 2020, 9:35 am

கலசபாக்கம் அருகே முதியோா்கள் காலில் விழுந்து கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்திய ஊராட்சி மன்றத் தலைவர்..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கலசபாக்கம் அருகே முதியோா்கள் காலில் விழுந்து கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தினர்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கிராமங்கள் தோறும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு, வீதிகள்தோறும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கலசப்பாக்கம் அருகேயுள்ள வில்வாரணி கிராமத்தில், கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள, முதியோா்கள் வெளியில் நடமாடவேண்டாம் என்று, அவா்கள் காலில் விழுந்து ஊராட்சி மன்றத் தலைவா்கள் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா்.

இதில், ஊராட்சி மன்றத் தலைவா்கள் கவிதா (எலத்தூா்), தரணி (தென்பள்ளிபட்டு), நிலவழகி (மேல்வில்வராயநல்லூா்), சண்முகப்பிரியா (பில்லூா்) என பல்வேறு ஊராட்சி மன்றங்களின் தலைவா்கள் கலந்து கொண்டனா்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!