18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வீ.கே.புதூர் பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணி- தனிமைப் படுத்தப்பட்டவர்கள் வீடுகளில் தாசில்தார் அதிரடி சோதனை..

வீ.கே.புதூர் பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணி- தனிமைப் படுத்தப்பட்டவர்கள் வீடுகளில் தாசில்தார் அதிரடி சோதனை..

எழுதியவர்: mohan April 8, 2020, 7:36 pm

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.கொரோனா தடுப்பு பணியில் முதற்கட்டமாக வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் தனிமைப்படுத்தப்படும் காலம் முடிவடைந்த பின்னரும் அவர்களையும் அவர்களது குடும்பத்தாரையும் மேலும் தொடர்ந்து கண்காணிக்கவும் தணிக்கை செய்தும் வருகின்றனர்.

இதன்படி வீரகேரளம்புதூர் தாலுகா வீரகேரளம்புதூர் மற்றும் சுரண்டை குறு வட்டத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில் வெளிநாடுகளிலிருந்து வந்து தனிமை படுத்தப்பட்டிருந்த நபர்களின் வீட்டிற்கு வீகேபுதூர் தாசில்தார் ஹரிகரன்,  மண்டல துணை தாசில்தார் சிவனு பெருமாள் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று, அந்நபருக்கோ அவரது குடும்பத்தினருக்கோ நோய் தொற்று அறிகுறிகள் ஏதும் உள்ளதா என கேட்டறிந்து தணிக்கை செய்தனர். தொடர்ந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கிய அதிகாரிகள் மார்க்கெட் மளிகை கடை, உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்க்கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!