17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் திடீர் தீ விபத்து.. பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு..

திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் திடீர் தீ விபத்து.. பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு..

எழுதியவர்: ஆசிரியர் April 8, 2020, 7:06 pm

மதுரை நகர் திருப்பரங்குன்றம் சரகம் கிரிவலப்பாதை புதிய மலைக்குப் போகும் பாதை மேல் (200 M)எதிர்பாராத விதமாக காய்ந்த செடிகள் மூலம் தீப்பற்றியது, அதே போல்  புதிய மலைக்குப் போகும் பாதை எதிரில் வயக்காட்டில் நூறு மீட்டர் உயரத்தில் இன்று (08/04/2020) மாலை 5 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

அதைக்கண்ட அப்பகுதி மக்கள் மதுரை டவுன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விசாரனையில் வெயில் காரணமாக தீப்பற்றி இருக்கலாம் என தெரியவருகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!