17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே எழுமலையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள இஸ்லாமிய பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கிய தன்னார்வ இளைஞர்கள்.

உசிலம்பட்டி அருகே எழுமலையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள இஸ்லாமிய பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கிய தன்னார்வ இளைஞர்கள்.

எழுதியவர்: mohan April 8, 2020, 6:36 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை இஸ்லாமிய தெருவைச் சேர்ந்த 3பேர் டில்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொண்டு வீடுதிரும்பிய நிலையில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்தவமணையில் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் அவர்கள் வசித்துவந்த பகுதிகள் முழுவதும் எழுமலை பேரூராட்சி அதிகாரிகள் 2மணி நேரத்திற்கு ஒருமுறை கிரிமி நாசினி மருந்துதெளிக்கபட்டு சுத்தம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் உசிலம்பட்டி நன்செய் புன்செய் விவசாய சங்கத்தின் சார்பில் இளைஞர்கள் சங்கத்தை சேர்ந்த சௌந்திரபாண்டியன் தலைமையில் இளைஞர்கள் சுகாதாரப் பணியாளர்களின் ஒப்புதலுடன் முககவசம் அணிந்துகொண்டு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள இஸ்லாமிய தெருக்களில் வசிக்கும் சுமார் 300க்கும் மேற்பட்ட மக்களுக்கு வீடு,வீடாக சென்று நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் வழங்கினர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!