தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட திருக்களாச்சேரி, ஆயப்பாடி, பாலூர், எடுத்துக்கட்டி, உள்ளிட்ட கிராமங்களில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நாகை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். இதில் தரங்கம்பாடி வட்டாட்சியர் சித்ரா மற்றும் செம்பனார்கோயில் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி தியாகராஜன், திருக்களாச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் எடுத்துக்கட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் உடனிருந்தனர். மாவட்ட ஆட்சியர் தனிமைப்படுத்தப்பட்ட 4 கிராமங்களில் உள்ள மக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் கிராம மக்களுக்கு உணவு, மளிகை பொருட்கள் தடையின்றி கிடைத்திடவும் வழிவகை செய்ய வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வட்டாட்சியர் ஆகியோருக்கு அறிவுறுத்தினார் . மேலும் மற்ற கிராமங்களில் நோய்த்தொற்று ஏற்படாதவாறு சமூக விலகலையும், தனிமைப்படுத்தலையும் கடைபிடிக்க வேண்டும் என்று வட்டார சுகாதார நிலைய அதிகாரியிடம் விளக்கிக் கூறினார். சமூக விலகல் மட்டுமே கொரோனா வைரசை கட்டுப்படுத்தக் கூடிய ஒன்றாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் கூறினார். இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை.







You must be logged in to post a comment.