18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கிராமங்கள்தோறும் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

நிலக்கோட்டை அருகே 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கிராமங்கள்தோறும் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

எழுதியவர்: mohan April 8, 2020, 10:58 am

நிலக்கோட்டை அருகே உள்ள கோடாங்கிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த 2 நபருக்கு கொரானா வைரஸ் தொற்றுநோய் உறுதியாய் விட்ட காரணத்தை தொடர்ந்து வைரஸ் பரவுவதை தடுக்க சுகாதார துறையினர், நிலக்கோட்டை பேரூராட்சி நிர்வாகம் நிலக்கோட்டை தீயணைப்புத் துறை ஆகிய இணைந்து நிலக்கோட்டை , கோடாங்கி நாயக்கன்பட்டி, என். புதுப்பட்டி, துரைச்சாமிபுரம், காமாட்சிபுரம், கொங்கர் குளம், மீனாட்சிபுரம், கொக்கு பட்டி சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணி நடந்தது. இப்பணியை தீயணைப்பு வண்டி மூலம் மருந்து தெளிப்பு நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு நிலக்கோட்டை பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை தீயணைப்பு நிலைய ஜோசப் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள், பேரூராட்சி ஊழியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!