17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஊரடங்கு உத்தரவில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் போலீசார் உசிலம்பட்டியின் முக்கிய சாலைகளில் தடை ஏற்படுத்தி நகருக்குள் செல்லவிடாமல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் போலீசார் உசிலம்பட்டியின் முக்கிய சாலைகளில் தடை ஏற்படுத்தி நகருக்குள் செல்லவிடாமல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

எழுதியவர்: mohan April 7, 2020, 12:31 pm

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் அதனை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் 144தடை உத்தரவு பிறக்கப்பட்டு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் வெளியே நடமாடவேண்டாம் தமிழக அரசு கேட்டுகொண்டுள்ளது. ஆனால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 144தடை உத்தரவை மதிக்காமல் பொதுமக்கள் வாகனங்களில் முக்கிய சாலைகளில் சுற்றிதிரிகின்றனர். மேலும் போலீசாரும் அவர்களை தொடர்ந்து ஊரடங்கை மதிக்கவேண்டும் என எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் போலீசாரின் எச்சரிக்கையை மீறி முக்கியசாலைகளிpல் வாகனங்கள் அதிகம் சென்றதால் போலீசார் மதுரைதேனி தேசிய நெடுஞ்சாலை, பேரையூர் சாலை போன்ற முக்கிய சாலைகளில் தடை ஏற்படுத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிப்பகுதிகளிலருந்து வருபவர்களிடம் காரணத்தை கேட்ட பின்புதான் நகருக்குள் செல்ல அனுமதிக்கின்றனர்.பொழுது போகமால் ஊருக்குள் வருபவர்களை எச்சரித்து திருப்பி அனுப்புகின்றனர்.ஆனால் போலிசார் அவ்வப்போது கண்காணித்து எச்சரித்தாலும் போலிசார் இல்லாத நேரங்களில் இந்த சாலைகளில் பயன்படுத்தி வருவதால் போலிசாருக்கும் இவர்களை கட்டுப்படுத்துவது சவாலான காரியமாக இருந்து வருகிறது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!