17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை அவனியாபுரத்தில் ‘லோடுமேன் வெட்டி கொலை

மதுரை அவனியாபுரத்தில் ‘லோடுமேன் வெட்டி கொலை

எழுதியவர்: mohan April 7, 2020, 11:32 am

மதுரை அவனியாபுரம் ராஜமான் நகரை சேர்ந்த நல்லுசாமி மகன் ராமமூர்த்தி ( 24). இவர் அந்த பகுதியில் லோடு மேன் ஆக உள்ளார். ராமமூர்த்தி நேற்று நள்ளிரவு சிந்தாமணி கண்ணன் காலனி வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அவரை 4 பேர் அடங்கிய கும்பல் வழிமறித்து தகராறு செய்தது. அப்போது ராமமூர்த்திக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.படுகொலை செய்யப்பட்ட ராமமூர்த்திக்கு தொழில் இருந்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாக அவர் வெட்டி கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் பகை உள்ளதா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!