18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அதிமுக சார்பில் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டு மாஸ்க், சானிட்டரி வழங்கப்பட்டது

உசிலம்பட்டி நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அதிமுக சார்பில் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டு மாஸ்க், சானிட்டரி வழங்கப்பட்டது

எழுதியவர்: mohan April 7, 2020, 8:53 am

கொரோனா பாதிப்பு எதிரொலியாக நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் நகர் பகுதி மற்றும் கிராமப்புறப் பகுதிகளை தூய்மையாக வைப்பதில் பெரும் பங்கு வகிக்கும் தூய்மை பணியாளர்களுக்கு மக்கள் அனைவரும் நன்றி தெரிவித்துஉசிலம்பட்டி நகராட்சியில் பணியாற்றும் 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் சார்பிலும், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. பா. நீதிபதி உத்தரவின்படி அதிமுக அம்மா பேரவை உசிலம்பட்டி நகர செயலாளர் பூமா ராஜா தலைமையில் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.

மேலும் 200க்கும் மேற்பட்ட இந்த தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம் மற்றும் கிருமி நாசினி வழங்கப்பட்டு அவர்களை மேலும் சிறப்பாக பணியாற்ற ஊக்கமும் அளிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் வழக்கறிஞர் லட்சுமணன், ராமநாதன் மற்றும் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த பிரபு, சசிக்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!