18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் குடிசை மாற்று வாரியத்தில் வசிப்போருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்..

இராமநாதபுரத்தில் குடிசை மாற்று வாரியத்தில் வசிப்போருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்..

எழுதியவர்: ஆசிரியர் April 6, 2020, 8:11 pm

இராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி குடியிருப்புகளில்  200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கொரானா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இத்தகைய சூழலில் அன்றாட வாழ்க்கையை நகர்த்த இயலாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாக இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.மணிகண்டனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு வசிக்கும் மக்களை சந்தித்து பேசினார். இக் குடியிருப்பில் வசிக்கும் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இரு வாரங்களுக்கு தேவையான மளிகை சாமான்கள், காய்கறிகள் உள்ளிட்ட சமையல் பொருட்களை, இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.எம்.மணிகண்டன் வழங்கினார். மேலும் முகக் கவசங்கள் வழங்கி சமூக இடைவெளி கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!