17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முதுகுளத்தூர் சுற்றுப்பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு

முதுகுளத்தூர் சுற்றுப்பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு

எழுதியவர்: mohan April 6, 2020, 4:03 pm

கொரானா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை ஊரடங்கு உத்தரவையடுத்து மக்கள் தங்கள் வீடுகளில் தங்கி உள்ளனர். இந்நிலையில் இராமநாதபுரம்  மாவட்டம் முதுகுளத்தூர்  அருகே கீழத்தூவல் ஊராட்சியில் உள்ள சாலைகள், கட்டடங்கள், கோயில் , வீடுகள், பொது இடங்களில் தீயணைப்பு துறை மூலம் கிருமி நாசினி , ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி முத்துராமலிங்கம்  ஏற்பாட்டில் தெளிக்கப்பட்டது. கீழத்தூவல்  சுற்று வட்டார கிராமங்கள், கிராம எல்லைகளில் மஞ்சள் கலந்த தண்ணீரில் ஊருக்குள் வருவோரின் கைகளை கழுவுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் வரும் வாகனங்களிலும் கிருமி நாசினி வாலிபர்களால் தெளிக்கப்பட்ட பிறகே ஊருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். சாலைகளில் தேவையின்றி சுற்றுத்திரிவோருக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!