18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுரண்டை சுற்று வட்டார பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு கொரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கல்..

சுரண்டை சுற்று வட்டார பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு கொரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கல்..

எழுதியவர்: mohan April 6, 2020, 10:01 am

தென்காசி மாவட்டம் சுரண்டை சுற்று வட்டார பகுதியில் சுமார் 350 குடும்பங்களுக்கு தேவையான கொரோனா நிவாரண பொருட்கள் நல்ல சமாரியன் கிளப் சார்பில் வழங்கப்பட்டது.கொரோனாவை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஊரடங்கினால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க சிரமப்படுகின்றகுடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

முன்னதாக பங்களாசுரண்டை, பரன்குன்றாபுரம், மருதுபுரம், ஊத்துமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த 350 குடும்பங்களுக்கு இரண்டாம் கட்டமாக சுரண்டை நல்ல சமாரியன் கிளப் சார்பில் டேனியல் ராஜம்மாள் அறக்கட்டளை மற்றும் சிஎஸ்ஐ பங்களாச்சுரண்டை தூய திருத்துவ ஆலய சபையார் உதவியுடன் அரிசி பருப்பு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகளை ஜேக்கப், ஸ்டீபன் ரத்தீஸ், கிருபாகரன், ஜேம்ஸ் அழகுராஜா, தனபால் ராஜசேகர், ஆபிரகாம், சின்னத்துரை, ராஜ்குமார், பங்களாசுரண்டை சேகர செயலாளர் அருள்ராஜ், சபை ஊழியர் ராஜப்பா, ஆசிரியர் தங்கராஜ், வெற்றி, பரன்குன்றாபுரம் ஜெபராஜ், பக்தசிங் உள்ளிட்டோர் வழங்கினர். முன்னதாக 1000 பேர்களுக்கு மாஸ்க் வழங்கப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!