18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் தோட்டக்கலைத்துறை சார்பில் அனைத்துகாய்கறிகள் அடங்கிய பை.ரூ100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

உசிலம்பட்டியில் தோட்டக்கலைத்துறை சார்பில் அனைத்துகாய்கறிகள் அடங்கிய பை.ரூ100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

எழுதியவர்: mohan April 5, 2020, 4:30 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு தோட்டக்கலைத்துறை சார்பில் அனைத்து காய்கறிகள் அடங்கிய ரூ100 மதிப்புள்ள காய்கறிகள் பைகளை பொதுமக்களின் வீடு தேடியும், வீதி,வீதியாக சென்றும் காய்கறிகளை விற்பனை செய்தனர். மிக குறைந்த விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்ததால் பொதுமக்கள் ஆர்வத்துடன் சமூக இடைவெளியை பின்பற்றி ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

இச்த காய்கறிகள் அடங்கிய பைகளில் 1கிலோ தக்காளி,கத்தரிக்காய் அரைகிலோ, வெண்டைக்காய் அரைகிலோ, மிளகாய் கால்கிலோ மற்றும் கருவேப்பிலை, புதினா, கொத்தமல்லி, முருங்கக்காய், பெரியவெங்காயம் கீரை உள்ளிட்ட காய்கறிகளும் அடங்கியருந்தது. இதில் தோட்டகலைத்துறை உதவிஇயக்குநர் பிரிஸ்கா பிளேவியா உத்தரவின்பேரில் துணை அலுவலர் திருக்குமார், சுருளீஸ்வரன் மற்றும் உதவி அலுவலர் பகலவன் மற்றுமு; மாரிச்செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் முககவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி வீதிவீதியாக சென்று காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!