18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரானா தடுப்பு பணி மாற்றுத்திறன் பணியாளர் தீவிர பங்களிப்பு…

கொரானா தடுப்பு பணி மாற்றுத்திறன் பணியாளர் தீவிர பங்களிப்பு…

எழுதியவர்: ஆசிரியர் April 5, 2020, 3:38 pm

இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரானா வைரஸ் பரவல் தடுப்பு பணியில் மாவட்டத்தில் உள்ள நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய ஆணையர்களுக்கு தமிழக அரசின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் அறிவுறுத்தி வருகிறார்.

ஆட்சியரின் உத்தரவு, சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின்  உதவி இயக்குநர் ரா.ராஜா அறிவுரைபடி கொரானா தடுப்பு  மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மண்டபம் பேரூராட்சி 18 வார்டுகளில் தூய்மை காவலர்கள், பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி வருகின்றனர்.  அதன்படி மண்டபம் பேரூராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செயல் அலுவலர் கி. ஜனார்த்தனன் தலைமையில் இளநிலை உதவியாளர் சு.முனியசாமி, மண்டபம் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் மெய்.ராமச்சந்திரன், துப்புரவு பணி பார்வையாளர் அ.ஜாகீர் உசேன், குடிநீர் பராமரிப்பு பணியாளர் என்.சோணைமுத்து, ஒப்பந்த பணியாளர் கஜமுகன் ஆகியோர் மேற்பார்வையில் கொரானா பரவல் தடுப்பு பணியை தொய்வின்றி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பேரூராட்சி எல்லையில் உள்ள கோழி, ஆடு இறைச்சி கடைகள் அதனருகே கிருமி நாசினி தெளித்து கண்காணித்து விதிமுறைகளை மீறும் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும், விதி மீறல் தொடரும் பட்சத்தில் கடையை மூட நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் அறிவுறுத்தினார்.

இதன்படி செயல் அலுவலர் கி.ஜனர் த்தனன் வழிகாட்டுதல்படி இளநிலை உதவியாளர் சுப.முனியசாமி தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் மண்டபத்தில் 6 கோழி இறைச்சி கடைகள், 3 ஆட்டிறைச்சி கடைகள், 10க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் அமைந்துள்ள இடங்களில் கிருமி நாசினி தெளித்தனர். கடைகளில் சமூக இடைவெளி கடைபிடித்து பொருட்கள் வாங்கிச் செல்ல அறிவுறுத்தினர்.  வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் வெளியே வராமல் கண்காணித்தனர். கொரானா வைரஸ் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட மாற்றுத்திறன் பணியாளர்களுக்கு விலக்களித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், மண்டபம் பேரூராட்சி இளநிலை உதவியாளராக பணியாற்றும் மாற்றுத்திறனாளி முனியசாமி தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டு பணியாற்றி வருகிறார். இவரது பங்களிப்பை பொதுமக்கள், சக பணியாளர்கள் பாரட்டி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!