17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சென்னையில் இறந்த கீழக்கரை முதியவருக்கு கொரானா.. ஊர் முழுவதும் கட்டுப்பாடு..மக்கள் நல்வாழ்வு துறை அறிவிப்பு..

சென்னையில் இறந்த கீழக்கரை முதியவருக்கு கொரானா.. ஊர் முழுவதும் கட்டுப்பாடு..மக்கள் நல்வாழ்வு துறை அறிவிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் April 5, 2020, 12:52 pm

இராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரையைச் சேர்ந்த 71 வயது முதியவர். இவர்  சென்னை மண்ணடியில் தங்கியிருந்து தொழில் செய்து வந்தார். இந்நிலையில் தொடர் காய்ச்சலால் அவதியடைந்த அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ஏப்.2ல் அவர் இறந்தார்.

இதனையடுத்து அவரது உடல்  கீழக்கரைக்கு ஏப்.3ல் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட அவரது ரத்த மாதிரியில் கொரானா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இன்று காலை அறிவித்தது.  இதனையடுத்து அவரது உடல் அடக்கத்திற்கு சென்றவர்களுக்கு மருத்துவ சோதனை செய்ய  150க்கும் மேற்பட்டோரின்  விவரங்களை கிராம நிர்வாக அலுவலர் மூலம் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!