17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பேரையூர் அருகே அத்திப்பட்டியில் டாஸ்மாக் கடையை திறந்து மது பாட்டில்கள் திருட்டு. டாஸ்மாக் சூப்பர்வைசர் உட்பட 3 பேர் கைது.

பேரையூர் அருகே அத்திப்பட்டியில் டாஸ்மாக் கடையை திறந்து மது பாட்டில்கள் திருட்டு. டாஸ்மாக் சூப்பர்வைசர் உட்பட 3 பேர் கைது.

எழுதியவர்: mohan April 5, 2020, 12:46 pm

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே அத்தி பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை திறந்து திருட்டுத்தனமாக மது பாட்டில்களை எடுத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் பேரையூர் காவல் துணை கண்கானிப்பாளர் மதியழகன் தலைமையில் சாப்டூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அத்திபட்டி டாஸ்மாக் கடையை திறந்து மது பாட்டில்களை விற்பனைக்காக சூப்பர்வைசர் திருமாணிக்கம் கந்தவேல் (41), சேல்ஸ்மேன் அக்னி (42), தர்மர் (42) ஆகியோர்கள் மது பாட்டில்களை திருடியது தெரிய வந்தது. உடனே போலீசார் 3 பேரையும் கைது செய்து மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் உசிலம்பட்டி கோட்டாட்சியர் ராஜ்குமார் உத்தரவின் பேரில் அத்தி பட்டியில் ஒரு டாஸ்மாக்கிற்கும், சாப்டூரில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைக்கும் வருவாய் ஆய்வாளர் மாரிச் செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!