18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வது வார்டு குடிநீரில் சாக்கடை துர்நாற்றம் வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வது வார்டு குடிநீரில் சாக்கடை துர்நாற்றம் வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

எழுதியவர்: mohan April 5, 2020, 12:18 pm

குடிநீர் துர்நாற்றம் மற்றும் சாக்கடை வருவதாக என பொதுமக்கள் குற்றச்சாட்டு. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட பழங்காநத்தம் அக்ரகாரம் மற்றும் வடக்குத்தெரு பகுதிகளில் நான்கு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வருகிறது .குடிநீரில் செம்மண் நிறத்தில் வருவதாகவும் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் இதனால் எங்களுக்கு நீரைக் குடிக்கும்போது உடல்நிலை பாதிக்கப் படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!