17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நேசம் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் இலவச முககவசம் விநியோகம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நேசம் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் இலவச முககவசம் விநியோகம்.

எழுதியவர்: mohan April 5, 2020, 12:11 pm

நேசம் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் இலவச முககவசம் விநியோகம் தொண்டியில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட அங்கு சிகிச்சைக்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவருக்கும் முககவசம் வழங்கப்பட்டது.மேலும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங் ஆப் இந்தியா, கனரா வங்கி, ஆர்.டி.டி.சி வங்கி உள்ளிட்ட அனைத்து வங்கி பணியளர்களுக்கும் மற்றும் அங்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் அனைவருக்கும் முககவசம் வழங்கப்பட்டது.

இதுவரை சுமார் 3500 முககவசங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வும் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகின்றனர்.இந்த சேவை பணியை நேசம் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கமும் இணைந்து நேசம் அறக்கட்டளையின் தலைவரும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கோட்டைச்சாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!