17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் அருகே கடலில் குதித்த மீனவர் பலி..

இராமநாதபுரம் அருகே கடலில் குதித்த மீனவர் பலி..

எழுதியவர்: ஆசிரியர் April 5, 2020, 11:30 am

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அம்பலகாரத்தெருவைச் சேர்ந்தவர்  ரத்தினகுமார். இவர் மீன்பிடி தொழிலுக்காக மங்களூரு சென்று புது விசைப்படகு வாங்க திட்டமிட்டார். இதற்காக  ராமேஸ்வரம் , பாம்பன் ,  மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த 15 மீனவர்களை  மங்களூருக்கு  அழைத்து செல்வதாக போலீசில் தகவல் தெரிவித்தார். ஆனால் அவர் 20 மீனவரை அழைத்து சென்றார். விசைப்படகை வாங்கி விட்டு ஊர் திரும்பிய இவர்கள் மண்டபம் திரும்பினர்.

அங்கு கடற்கரையில் படகை போலீசார் சோதனை செய்வர் என்ற அச்சத்தில் ஐந்து பேர் கடலில் குதித்து நீந்தி கரை வந்து சேர முடிவு செய்தனர். இதன்படி கடலில் குதித்த 5 பேரில் நால்வர் நீந்தி கரை சேர்ந்தனர். இவர்களில் மேட்டுக்காரன் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர் கடலில் மூழ்கி பலியானார். இவரது உடல் உச்சிப்புளி அருகே வலங்காபுரி கடற்கரையில் கரை ஒதுங்கியது. அவரது உடலை மெரைன் போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!