17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அதிமுக அரசே, முதல்வர் பழனிச்சாமியே பாஜகவுக்கு நன்றி விசுவாசம் செய்யும் நேரமா? சமூக வலைத்தளங்களில் பரவும் போஸ்டரால் பரபரப்பு…

அதிமுக அரசே, முதல்வர் பழனிச்சாமியே பாஜகவுக்கு நன்றி விசுவாசம் செய்யும் நேரமா? சமூக வலைத்தளங்களில் பரவும் போஸ்டரால் பரபரப்பு…

எழுதியவர்: Askar April 5, 2020, 9:32 am

கொரோனா தொடர்பாக பேசும் அனைவரும் முதல்வருக்கும் சுகாதாரத்துறை அமைச்சருக்கும் இடையேயான பனிப்போர் குறித்து விவாதிக்க மறப்பதில்லை. அந்தவகையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தொடர்பான அனைத்து பணிகளிலும் முற்றிலும் ஒதுக்கப்பட்டு விட்டார். அடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் என்ன செய்யப்போகிறார்? என்கிற பரபரப்பான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் சமூக வலைதளங்களில் நேற்று துவங்கி உலா வரும் போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது..

கறுப்பு வெள்ளையில் அதிமுக அரசே, முதல்வர் பழனிச்சாமியே என ஆரம்பிக்கும் இந்த போஸ்டர் பாஜகவுக்கு நன்றி விசுவாசம் செய்யும் நேரமா? கொரோனா வைரஸ் பரவலை கடுப்படுத்த சிறப்பாக பணியாற்றிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மீண்டும் பொறுப்பு வழங்கிடு.. பாஜக பொன் ராதாகிருஷ்ணனின் உறவினரான சுகாதாரத்துறை செயலாளர் பீலாவை டிஸ்மிஸ் செய் என இந்த போஸ்ட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் சுற்றி வரும் இந்த போஸ்டர் எங்கும் ஓட்டியிருப்பதாக தெரியவில்லை. மேலும் யார் அடித்தது என்கிற எந்த விபரமும் இல்லை..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!