17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொண்ணமராவதி காவல் ஆய்வாளர் கருணாகரனின் அதிரடி நடவடிக்கை; காவல் நிலையத்தில் குவிந்து கிடக்கும் வாகனங்கள்..

பொண்ணமராவதி காவல் ஆய்வாளர் கருணாகரனின் அதிரடி நடவடிக்கை; காவல் நிலையத்தில் குவிந்து கிடக்கும் வாகனங்கள்..

எழுதியவர்: Askar April 5, 2020, 9:22 am

பொன்னமராவதி காவல் நிலையத்தில் குவிந்து வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள். தடையை மீறி சென்றதால் 91 வாகனங்கள் 39 செல்போன்கள் பறிமுதல். சிபாரிசுகள் கிடையாது. காவல்துறை அதிரடி நடவடிக்கை.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காவல் நிலையத்தில் டி.எஸ்.பி தமிழ்மாறன், காவல் ஆய்வளர் கருணாகரன் ஆகியோர் தலைமையில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் பொதுமக்கள் மீள காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றது. 144 தடை உத்தரவு வரும் ஏப்ரல் 14 தேதி வரை உள்ளது. இந்நிலையில் இருசக்கர வாகனங்களில் பொன்னமராவதி, அண்ணாசாலை, பொன்-புதுப்பட்டி, நாட்டுக்கல் வீதி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த இரு சக்கர வாகனங்கள் 85, கார், ஓம்னி, லோடு ஆட்டோ என மொத்தம் 91 வாகனங்கள், 39 செல்போன்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்து வழக்கு பதிந்துள்ளனர். இந்நிலையில் அவ்வாறு பிடிபட்ட வாகனங்கள் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு மேல் அன்றைய நிலையை பொருத்து கோர்ட்டில் அபராத தொகையை கட்டிய பின்பு அதன் ரசீதை கொண்டு பொன்னமராவதி காவல் நிலையத்தில் கொடுத்து வாகனங்களை பெற்றுக்கொள்ளலாம் என காவல்துறை அறிவித்துள்ளது. பிடிபட்ட வாகனங்களை மீட்க எந்தவித சிபாரிசுகளும் கிடையாது எனவும் அறிவித்துள்ளனர். இந்த நடவடிக்கைகளின் மூலமாக பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக செல்வதையும், பாதுகாப்பு கருதி சமூக இடைவெளிகளை கடைபிடிக்கவும் வாய்ப்பு இருக்கின்றது, பொதுமக்களுக்கு கொரோனா வைரசின் அருமை இன்னும் தெரியாமல் . அலட்சியப் போக்கில் உலா வருகின்றனர். எனவே இந்த நிலையை மாற்றத்தான் இந்த அதிரடி நடவடிக்கைகள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!