17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » “சத்திய பாதை – கீழை நியூஸ்” குழுமத்தின் சார்பாக திண்டுக்கல் மாவட்டம் காவல் நிலையம், DSP அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் என ஏராளமானோருக்கு முக கவசம்…

“சத்திய பாதை – கீழை நியூஸ்” குழுமத்தின் சார்பாக திண்டுக்கல் மாவட்டம் காவல் நிலையம், DSP அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் என ஏராளமானோருக்கு முக கவசம்…

எழுதியவர்: ஆசிரியர் April 5, 2020, 12:17 am

கொரோனா வைரஸ் தொற்று வீரியம் அடைந்து வரும் காரணமாக அதை கட்டுப்படுத்த, மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.இதில் முக்கிய அம்சமாக முக கவசம் அணிய வலியுறுத்தியும் வருகிறது.இதன் காரணமாக முக கவசங்களை பதுக்கியும், விலையை அதிகப்படுத்தி விற்பனை செய்தும் சில சமூக விரோதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது சம்பந்தமாக பல தகவல்கள் நமக்கு கிடைக்கப்பெற்றதை அடுத்து, பொதுமக்கள் நலன் கருதி “கீழை நியூஸ்” குழுமம், “சத்திய பாதை” இதழ் குழுமத்தின் மற்றும் “தமிழ் நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கத்தின்” மாநில இணைச் செயலாளர் செய்யது ஆப்தீன்  சர்பாக தேவையான நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதனடிப்படையில் சத்திய பாதை இதழின் முதன்மை ஆசிரியர் ஜெ.அஸ்கர் தலைமையில் காவல் துறையினர், வருவாய்த்துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோருக்கு இலவசமாக வழங்கப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை DSP பாலகுமார் கூறுகையில் “சத்திய பாதை இதழின் சேவைகள் மிகவும் பாராட்டத் தக்க செயலாகும் தற்போதைய சூழ்நிலையில் இது போன்ற சேவைகள் செய்வது மிகவும் வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார், அதே போன்று வட்டாட்சியர் யூஜின் கூறும்போது, சத்திய பாதை இதழ் மற்றும் கீழை நியூஸ் குழுமத்தின் சேவைகள் பாராட்டத்தக்கது என்று கூறினார். பல்வேறு பத்திரிகைகள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் நடத்தப்படும் சூழலில் சொந்த பணத்தில் மக்களுக்கு சேவைகள் செய்து உதவிகள் செய்து வரும் சத்திய பாதை இதழ் மற்றும் கீழை நியூஸ் குழுமத்திற்கு அனைத்து தரப்பினரும் பாராட்டி வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!