17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 144 தடை உத்தரவை மீறும் இளைஞர்களுக்கு காவல் ஆணையரின் எச்சரிக்கை!

144 தடை உத்தரவை மீறும் இளைஞர்களுக்கு காவல் ஆணையரின் எச்சரிக்கை!

எழுதியவர்: mohan April 4, 2020, 4:36 pm

* 144 தடை உத்தரவுகளை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் தினந்தோறும் பிரிவு 188, 269, 270 இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்து வருகின்றனர்.

கடந்த 23.03.2020-ம் தேதி முதல் 03.04.2020- ம் தேதி வரை 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது 521 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 578 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 908 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

*இந்த குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கும் பட்சத்தில் உங்களது பாஸ்போர்ட், அரசு வேலை மற்றும் லைசென்ஸ் பெறுவதற்கு நீங்கள் விண்ணப்பிக்கும் போதும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் தடையில்லா சான்று பெறும்போதும் எதிர்காலத்தில் நிச்சயமாக உங்களுக்கு பிரச்சனைகள் வரலாம் ஆகவே கவனமாகவும் பொறுப்பாகவும் நடந்துகொள்ளவும்.

*நேரம் போகவில்லை என நினைத்து யாரும் வெளியில் சென்று உங்களது எதிர்கால வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள்..

Stay at Home

காவல் ஆணையர் மதுரை மாநகர்…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!