18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அமெரிக்க அதிபருக்கு கொரோனாவா?- இரண்டாம் முறை பரிசோதனை:-பரபரப்பில் வெள்ளை மாளிகை..

அமெரிக்க அதிபருக்கு கொரோனாவா?- இரண்டாம் முறை பரிசோதனை:-பரபரப்பில் வெள்ளை மாளிகை..

எழுதியவர்: Askar April 3, 2020, 4:33 pm

அமெரிக்க அதிபருக்கு கொரோனாவா?- இரண்டாம் முறை பரிசோதனை:-பரபரப்பில் வெள்ளை மாளிகை..

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதால் சந்தேகம் எழுந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் மட்டும் ஏறத்தாழ 2.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. பல முக்கிய பிரமுகர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு பின் நாட்களில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டிரம்புக்கு கொரோனா பரிசோதனை, கடந்த சில வாரங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பரிசோதனை முடிவுகள் கொரோனோ இல்லை என வந்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இரண்டாவது முறையாக நேற்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதால் சந்தேகம் எழுந்துள்ளது.

இருப்பினும் இரண்டாவது சோதனையிலும் டிரம்புக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்று அமெரிக்க வெள்ளை மாளிகையின் மருத்துவர் கான்லி தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!