17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே கொரோனா தாக்குதல் எதிரொலி. போலீஸ் பாதுகாப்பில் கிராமம். பொதுமக்கள் பீதி

நிலக்கோட்டை அருகே கொரோனா தாக்குதல் எதிரொலி. போலீஸ் பாதுகாப்பில் கிராமம். பொதுமக்கள் பீதி

எழுதியவர்: mohan April 3, 2020, 11:59 am

  நிலக்கோட்டை அருகே உள்ள கோடாங்கிநாயக்கன்பட்டி சேர்ந்த சிலர் டெல்லியில் நடந்த மாநாட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.     அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு தொற்று அதிகமாக இருந்தது தெரியவந்தது காரணமாக கோடாங்கிநாயக்கன்பட்டி சேர்ந்த ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதியாகி விட்ட நிலையில் உடனடியாக அக்கிராமத்தில் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டு ஊரைவிட்டு யாரும் வெளியே வர என்ற அளவில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தப் பகுதியை நிலக்கோட்டை தாசில்தார் யூஜின், மண்டல துணை தாசில்தார் ராமசாமி, கிராம நிர்வாக அலுவலர் ராமமூர்த்தி, மற்றும் சுகாதாரத் துறையினர் சென்று வீடு வீடாக மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலக்கோட்டை செய்தியாளர். ம. ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!