17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நடமாடும் காய்கறி கடை துவக்கம்.

நடமாடும் காய்கறி கடை துவக்கம்.

எழுதியவர்: mohan April 2, 2020, 5:21 pm

கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் அனாவசியமாக வெளியே வராமல் இருக்க அத்தியாவசியமான பொருளான காய்கறிகள் நேரடியாகவே மாநகராட்சி சார்பாக வீடு வீடாக கொண்டு செல்லும் திட்டம் அமல். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட எண்ணி 95-ஆவது வார்டு பகுதியில் பொறியாளர் முருகன் தலைமையிலான குழுவினர் திருப்பரங்குன்றம் கூடல் மலை தென்பரங்குன்றம் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் மாநகராட்சி சார்பாக நடமாடும் காய்கறி விற்பனையாளர் மாநகராட்சி சார்பாக ஒவ்வொரு வீடாக வழங்கப்பட்டது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே காய்கறி மாநகராட்சி சார்பாக கொண்டு வந்து கொடுப்பது நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு உறுதுணையாக இருக்கிறது என அப்பகுதி மக்கள் நமது செய்தியாளருக்கு பேட்டி அளித்தனர்.மேலும் இதுபோன்று ரேஷன் பொருள்களையும் நேரடியாக ஒவ்வொரு வீட்டிற்கும் வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!