17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி மற்றும் பேரையூர் பகுதிகளில் உள்ள 285 ரேசன் கடைகள் மூலம் கொரோனா பாதிப்பு உதவி தொகை மற்றும் உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்தை அந்தந்த பகுதி கூட்டுறவு சங்க தலைவர்கள் துவங்கி வைத்தனர்.

உசிலம்பட்டி மற்றும் பேரையூர் பகுதிகளில் உள்ள 285 ரேசன் கடைகள் மூலம் கொரோனா பாதிப்பு உதவி தொகை மற்றும் உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்தை அந்தந்த பகுதி கூட்டுறவு சங்க தலைவர்கள் துவங்கி வைத்தனர்.

எழுதியவர்: mohan April 2, 2020, 4:08 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள 164 கடைகளிலும், பேரையூர் பகுதிகளில் உள்ள 121 கடைகளிலும் உள்ள சுமார் 1,37,118 குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா பாதிப்பு காலத்தில் அவர்களுக்கான உதவித்தொகையாக ஆயிரம் ரூபாய் மற்றும் உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்தை அந்தந்த பகுதி கூட்டுறவு சங்க தலைவர்கள் துவங்கி வைத்து பொதுமக்களுக்கு வழங்கினர்,

குறிப்பாக மக்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு, ஒரு நாளைக்கு 50 மற்றும் 100 குடும்ப அட்டைகள் என 10 தினங்களுக்கு எந்த தடையும் இன்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஒவ்வொரு ரேசன் கடைகள் தோறும் அரசின் விதிமுறைகளை மக்கள் பின்பற்றும் நோக்கி சமூக இடைவெளிக்கான வளையங்கள் அமைக்கப்பட்டு மக்கள் சமூக இடைவெளியுடன் வந்து பொருட்களை பெற்றுச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!