17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா பீதியால் உசிலம்பட்டி அருகே சமத்துவபுரத்தில் நரிக்குற காலனிக்குள் வெளி ஆட்கள் யாரும் வரக்கூடாது என்ற அறிவிப்புடன் தடுப்புவேலி அமைக்கப்பட்டு சாலை மூடப்பட்டுள்ளது.

கொரோனா பீதியால் உசிலம்பட்டி அருகே சமத்துவபுரத்தில் நரிக்குற காலனிக்குள் வெளி ஆட்கள் யாரும் வரக்கூடாது என்ற அறிவிப்புடன் தடுப்புவேலி அமைக்கப்பட்டு சாலை மூடப்பட்டுள்ளது.

எழுதியவர்: mohan April 2, 2020, 2:50 pm

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதனை தடுக்கும் முயற்சியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கிராமப்பகுதிகளில் பொதுமக்களே கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி மருந்துகள் மற்றும் மஞ்சள் நீர் தெளித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சமத்துவபுரத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவ மக்கள் வசித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தாக்கத்தையறிந்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நரிக்குறவ மக்கள் தங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வெளி ஆட்கள் யாரும் உள்ளே வர அனுமதியில்லை என அறிவிப்பு பலகை வைத்து, தடுப்புவேலி அமைத்துள்ளனர். வெளிஆட்களை அனுமதிக்காவிட்டாலும் அங்கு வசிக்கும் மக்கள் கொரோனா வைரஸ் குறித்து எந்த விழிப்புணர்வு இல்லாமலும், முகக்கவசம் அணியாமல் உள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!