18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தரங்கம்பாடி தாலுக்கா முழுவதும் அரசு அறிவித்த கொரானா நிவாரணம் உதவி திட்டம் வழங்கப்படுகிறது,

தரங்கம்பாடி தாலுக்கா முழுவதும் அரசு அறிவித்த கொரானா நிவாரணம் உதவி திட்டம் வழங்கப்படுகிறது,

எழுதியவர்: mohan April 2, 2020, 2:03 pm

நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா , பூம்புகார் சுற்றுவட்டார பகுதிகளில் 9வது நாளாக 144 தடை உத்தரவு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. தரங்கம்பாடி தாலுக்கா முழுவதும் அரசு அறிவித்த கொரானா நிவாரணம் உதவி திட்டம் வழங்கப்படுகிறது, இதில் எடுத்துக்கட்டி ஊராட்சியில் நியாயவிலைக்கடையில் பூம்புகார் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் நிவாரணப்பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார் ஒவ்வொரு நியாயவிலை கடைகளிலும் இன்று முதல் ஒவ்வொரு நாளும் சுமார் 100 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத்தொகை, அரிசி, பருப்பு , சர்க்கரை, எண்ணெய் வழங்கப்படுகிறது,

இதனை நியாயவிலை கடைகளில் சமூக இடைவெளி விட்டு பொதுமக்கள் நிறுத்தப்பட்டு நிவாரணம் வழங்கப்படுகிறதா என கண்காணிக்க சமூக நல பாதுகாப்பு தனி துணை ஆட்சியர் ராஜன், வட்டவழங்கல் அலுவலர் பிரான்சுவா தலைமையில் 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு விழிப்புணர்வு பற்றியும் சமூக இடைவெளியை பற்றியும் விளக்கிக் கூறி விழிப்புணர்வாகவும், பாதுகாப்பு இருக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

இரா. யோகுதாஸ்,மயிலாடுதுறை,

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!