18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் சமூக ஆர்வலர்கள், சமூக அமைப்புகள் சேர்ந்து தேவையுடையோருக்கு உதவி..

கீழக்கரையில் சமூக ஆர்வலர்கள், சமூக அமைப்புகள் சேர்ந்து தேவையுடையோருக்கு உதவி..

எழுதியவர்: ஆசிரியர் April 1, 2020, 2:30 pm

இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டு தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலை கருதி  கீழக்கரை நகராட்சிக்கு உள்பட்ட சாலை தெரு, ஜின்னாதெரு, மீன்கடை தெரு, NMT தெரு,கருப்பட்டி கார தெரு, பட்டணியப்பா தெரு,புது கிழக்கு தெரு,பெரிய காடு, மீனாட்சிபுரம் மற்றும் 500 பிளாட் பகுதியை சேர்ந்த மிகவும் வறுமையில் இருக்கும் ஏழை மக்களுக்கு சமூக ஆர்வலர்கள் ஒத்துழைப்போடு தலா 4 நபருக்கு 5 கிலோ அரிசி,51 நபருக்கு தலா3கிலோ அரிசி மற்றும் 1 கிலோ தக்காளி,பெரிய வெங்காயம்,1/2 கிலோ உருளைகிழங்கு, பீட்ரூட், 200 மில்லி கோல்ட் வின்னர் ஆயில்,1/2கிலோ சீனி ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த பணியை நேற்று (31/03/2020) மாலை தொடங்கி சுமார் 55 குடும்பங்களுக்கு இது வரை அரசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டுள்ளது. இப்பணியில் சாலைதெருவை சார்ந்தசமூக ஆர்வலர்கள் ஜகுபர் அலி , கீழை அஸ்ரப், முகைதீன் இப்ராகீம் ஆகியோர் இணைந்து செயல்பட்டனர்

மேலும் இப்பணியின் தொடர்ச்சியாக வரும் 4ம் தேதி இன்னும் பல குடும்பங்களுக்கு பொருட்கள் வழங்கப்படும் என்று இக்குழுவினர் தெரிவித்துக்கொண்டதோடு, இதற்கு உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!