18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக உசிலம்பட்டி முக்கிய வீதிகளில் வெளியில் சுற்றுபவர்களுக்கு அட்வைஸ் செய்து இலவசமாக முககவசம் வழங்கிய சமூக ஆர்வலர்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக உசிலம்பட்டி முக்கிய வீதிகளில் வெளியில் சுற்றுபவர்களுக்கு அட்வைஸ் செய்து இலவசமாக முககவசம் வழங்கிய சமூக ஆர்வலர்.

எழுதியவர்: mohan April 1, 2020, 12:27 pm

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக உசிலம்பட்டி முக்கிய வீதிகளில் இலவசமாக முககவசம் வழங்கிய சமூக ஆர்வலர்.தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அதனை தடுக்கும் விதமாக பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கவேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே செல்லும் போது முககவசம் அணிய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அத்யாவசிய பொருட்கள் வாங்க முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், முககவசம் வழங்கியும் சமூக சேவையை செய்து வருகிறார் சமூக ஆர்வலர் சின்னராஜா. இவர் உசிலம்பட்டியின் முக்கிய தெருக்களான நகைகடை பஜார், ஜவுளிகடை கடைபஜார், நாhடார்தெரு. விகேஎஸ் தெரு போன்ற தெருக்களில் அத்யாவசிய பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக முககவசம் வழங்கினார். இவ்வாறு சமூக சேவையை செய்து வரும் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!