18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் 144 தடை மீறல் 7 நாட்களில் 528 வழக்குகள், 473 பேர் கைது, 356 வாகனங்கள் பறிமுதல்..

இராமநாதபுரத்தில் 144 தடை மீறல் 7 நாட்களில் 528 வழக்குகள், 473 பேர் கைது, 356 வாகனங்கள் பறிமுதல்..

எழுதியவர்: ஆசிரியர் April 1, 2020, 1:47 pm

கொரானா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடெங்கும் மார்ச் 25 ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறுவோர் மீது போலீசார் வழக்கு பதிந்து வருகின்றனர்.

இதன்படி கடந்த 7 நாட்களில் இராமநாதபுரம் காவல் துணை கோட்டத்தில் 101, பரமக்குடி காவல் துணை கோட்டத்தில் 99, முதுகுளத்தூர் காவல் துணை கோட்டத்தில் 80, ராமேஸ்வரம் காவல் துணை கோட்டத்தில் 71, கீழக்கரை, கமுதி காவல் துணை கோட்டங்களில் தலா 67 ,திருவாடானை காவல் துணை கோட்டத்தில் 43 வழக்குகள் என 528 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் 473 பேர் கைது செய்யப்பட்டு, 356 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!